நானும் பலமுறை நினைத்து உள்ளேன்,
என் அம்மாவை பற்றி வரி வரிக்கு வர்ணிக்கும் நான்
ஏன் என் அப்பாவை பற்றி எழுத முடியாமல் திணறுகிறேன் என்று!!!
என் அப்பா - வையும் அம்மா - வையும் என் இரு கண்களாக பாவிக்கும் எனக்குள்,
ஏன் இந்த பேதம் என்று?
ஆனால் அதற்க்கு பதிலாக இன்று எனக்குள் தோன்றியது என்னவென்றால்?
அம்மாவின் மேல் இருக்கும் அன்பு வடிவம் உள்ளது,
ஆனால் என் செல்லஅப்பா - வின் மேல் வைத்திருக்கும் பாசத்துக்கு,
வார்த்தையும் கிடையாது, வடிவமும் கிடையாது!
ஆனால் அது கண்டிப்பாக அளவிட முடியாத ஒன்று!
இந்த கவிதையை என் அப்பா - வுக்கு சமர்பிக்கிறேன்
- சரண்யா தியாகராஜன்


No comments:
Post a Comment